தமிழ் கல்வெட்டியல்
கடந்த சில வாரங்களாக திரு.இராமசந்திரன் அவர்களிடம் கல்வெட்டியல் பயின்று வருகின்றேன். இந்த வகுப்பு ரீச் (http://conserveheritage.org/) மூலம் நடத்தப்படுகின்றது. நான் கற்றவற்றை என் பதிவின் மூலம் பகிர்ந்து கொள்ள முனைகிறேன்.
1.எண்கள்
தற்காலத்தில் நாம் எண்களை இந்தோ-அரேபிய முறையில் எழுதுகிறாம். ஆணால் 19ம் நூற்றாண்டு வரை தமிழில் எண்களை எழுதிய முறை வேறு. மொத்தம் 13 வகையான குறியீடுகளை கொண்டு எண்கள் (முழு) குறிக்கப்பட்டன. அவையாவன:
| தற்கால எண் | தமிழ் முறை | யுனிகோட் குறியீடு |
| 1 | ௧ | ௧ |
| 2 | ௨ | ௨ |
| 3 | ௩ | ௩ |
| 4 | ௪ | ௪ |
| 5 | ௫ | ௫ |
| 6 | ௬ | ௬ |
| 7 | ௭ | ௭ |
| 8 | ௮ | ௮ |
| 9 | ௯ | ௯ |
| 10 | ௰ | ௰ |
| 100 | ௱ | ௱ |
| 1000 | ௲ | ௲ |
பூஜ்யத்திற்கு என்று தனி குறியீடு எதுவும் இல்லை. பிறகு எண்களை எப்படி எழுதுவது? சில எடுத்துக்காட்டுகள் மூலம் காண்போம்.
5=௫ -ஐந்து
15= ௰௫ -பத்து + ஐந்து
25=௨௰௫ -இரண்டு பத்து + ஐந்து
இம் முறை கிட்டத்தட்ட சொல்லால் எழுதுவது போல் உள்ளது. பத்தின் அடுக்குகளாக (10,100,1000) வரும் போது அதற்குரிய குறியாக மாற்ற வேண்டும்
கணித பாடத்தில் வரும் இருபடி சமன்பாடு (Quadratic Equation – ax^2+bx+c) நினைவூட்டிக்கொண்டால் எளிதாக இருக்கும்.
தற்கால முறைக்கு பழகியநாம் பழைய முறையில் மாற்ற கிழ் கண்ட படிகளை கையாளலாம்
1.எண்களை முதலில் பத்தின் அடுக்காக மாற்றிக்கொள்ள வேண்டும்.
2356 = 2×1000+3×100+5×10+6
2050 = 2×1000+0×100+5×10+0
2150 = 2×1000+1×100+5×10+0
2.ஒவ்வொரு எண்ணுக்கு பதிலாக அதற்குறிய குறியை குறிக்கவும்.
2356 = ௨ x ௲ + ௩ x ௱ + ௫ x ௰ + ௬
கெழு/குணகம்(co-efficient) பூஜ்யமாணால் அதை விட்டு விட வேண்டும்
2050 = ௨ x ௲ + – - + ௫ x ௰ + -
கெழு/குணகம்(co-efficient) ஒன்றானால் பத்தின் அடுக்குகள் (10,100,1000) மட்டும் குறித்தால் போதும்.
2356 = ௨ x ௲ + ௩ x ௱ + ௫ x ௰ + ௬
3.பிறகு சேர்த்து எழுதவும்
2356 = ௨௲௩௱௫௰௬
2050 = ௨௲ ௫ ௰
2356 = ௨௲ ௩ ௱௫௰௬
9999 வரை எளிதாக எழுதிவிடலாம். ஆயிரத்திற்க்கு மேல் எண்களை ஆயிரத்தின் அடுக்குகளாக எழுத வேண்டும்.
ஓர் எடுத்துக்காட்டின் மூலம் காண்போம்
12356= ௰௨௲௩௱௫௰௬
12356 = (12 x1000) + 3×100 + 5×10 +6
= ((10+2)x1000) + 3×100 + 5×10 +6
= ௰௨௲௩௱௫௰௬
எளிதாக மாற்ற ஓர் சிறிய மென்பொருளை எழுதியுள்ளேன். அதை பெற இங்கே சொடுக்கவும்
Posted by ramanchennai