தேர்தல் நேரம் – சரியான தேர்வு?

தேர்தல் நேரம் – சரியான தேர்வு

.எப்ரல் 13 2011 தமிழ் நாட்டு மக்கள் தங்களை யார் ஆளவேண்டும் என்று முடிவு செய்யும் நாள். மக்களாட்சியில் அதிகாரம் மக்கள் கையில் என்பது உண்மை. ஆனால் நடைமுறையில் சரியான மனிதரை தேர்வு செய்வதில் பெரும்பாலும் தோல்வியே. கடந்த சில மாதங்களாக பல்லவர் வரலாற்றை ஆழ்ந்து படித்து வருகிறேன். அக்காலத்தில் பரம்பரை ஆட்சியே. ஆயிணும் மக்கள் விருப்பத்திற்கு மரியாதை இருந்து என்பதற்கு இரண்டாம் நந்தி வர்மனே சாட்சி . நந்தி வர்மன் குறித்து அறிவதற்க்கு சற்றே பல்லவர் பரம்பரை குறித்து பார்ப்போம்

பல்லவர்கள் கி.பி. 250முதல் தொண்டை மண்டலத்தை ஆளத் தொடங்கினர். ஆயினும் மூன்றாம் சிம்மவர்மன் (550-5 75) முதலே வரலாறு ஓரளவேனும் தெளிவாய் இருக்கிறது.

மூன்றாம் சிம்ம வர்மன் ( 550-560)
சிம்மவிஷ்ணு (560-90) பீமவர்மன்
மகேந்திரவர்மன் (590-630) புத்தவர்மன்
நரசிம்மவர்மன் (630-638) ஆதித்தவர்மன்
மகேந்திரவர்மன் II (660-70) கோவிந்தவர்மன்
பரமேசுவரவர்மன் (670-700) இரண்யவர்மன்
நரசிம்மவர்மன் II (695-728)
பரமேசுவரவர்மன் II (728-31)
சித்திரமாயன் ? நந்திவர்மன் (731-96)
தந்திவர்மன் (796-847)
மூன்றாம் நந்திவர்மன் (846-69)

சித்திரமாயன் தவிர இப்பரம்பரையை சேர்ந்த வேறு சிலரும் இருந்தனர்.

இரண்டாம் பரமேசுவரவர்மன் இறந்த பின் அவனது மகன் சித்திர மாயன் பதவி ஏற்கவில்லை. பதிலாக இரண்யவர்மன் மகனான பண்னிரண்டு வயது பல்லவமல்லன் பதவி ஏற்கிறான் நந்திவர்மன் எனும் பட்டப்பெயருடன்.

இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்

1.சித்திரமாயன் சிறுவன்

2.சித்திரமாயன் பொறுப்பற்று பதவிக்கு தகுதியற்றவன்.

3.இப் பரம்பரை சார்ந்த பிறர் தகுதியற்றவர்கள்

முதல் காரணம் ஏற்புடையதாக இல்லை. பட்டத்திற்க்கு வந்த நந்திவர்மனும் சிறுவனே. ஆக சித்திரமாயனும் மற்றவர்களும் தகுதியற்றவர் என்பதே காரணமாகும். சரி யார் இதை தீர்மானித்தது? சித்திரமாயன் வளாய்யிருந்தானா?

அமைச்சர்களும்,  கடிகை எனப்படும் பல்கலைகழகத்தவரும,  குடிமக்களும்,  பிற அரசியல் பொறுப்பில் உள்ளவர்களாலும் நந்திவர்மன் தேர்தெடுக்கப்பட்டான். இதில் கவனிக்க வேண்டியவை

 1. சுமார் 170 வருடம் கழித்து ஓர் பரம்பரை ஆட்சிக்கு வருகிறது.
 2. நந்திவர்மனோ அவன் தந்தையோ தொண்டை மண்டலத்திலேயே இல்லை. அவன் காடு மலை நதிகளை கடந்து காஞ்சி வருகிறான். கடலை கடந்து கூட வந்து இருக்கலாம் என சில வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
 3. இவன் காஞ்சியில் நுழைவதை பிற பல்லவர்கள் எதிர்க்கிறார்கள. சேணாதிபதி உதயசந்திரன் போரிட்டு நந்திவர்மனை காப்பாற்றுகிறான்.
 4. அந்நாளில் பல்லவர் ஆதிக்கம் தீவாந்திரம் எனப்படும் மலேசியா போன்ற இடங்களில் இருந்தது.ஆகையால் நந்திவர்மன் அங்கேயிருந்தும் வந்திருக்கலாம்.
 5. நந்திவர்மன் வயது பன்னிரன்டிற்கும் குறைவு.

ஆக ஓர் சிறுவனை அரியனை ஏற்றுகிறார்கள் மக்கள். இவர்கள் தேர்வு சரியா? அம்மன்னன் எப்படி பட்டவன்? . இதோ நந்திவர்மன் பற்றிய சில குறிப்புகள்

 1. 65 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். பல்லவர்களில் மிக நீண்டகாலம் ஆட்சி செய்தவன் இவனே.
 2. சிறந்த போர் வீரன் சளுக்கர் கங்கர் போன்றோறை வென்றவன்
 3. சிறந்த திருமால் பக்தன் .
 4. காஞ்சி வைகுந்த பெருமாள் கோயில் திருவதிகை வீரட்டானேச்சுரர் கூரம் கேசவப்பெருமாள் புதுக்கோட்டை குன்றாண்டார் கோயி ல் போன்ற பல கோயில்கள் அமைத்தான்
 5. சமண புத்த சமயங்களையும் ஆதரித்தான்
 6. சிறந்த கல்விமான். காவிய நாடகங்கள் செய்யுள் இயற்று வதில் வல்லவன். குறிப்பாக – பிந்துமதி (புள்ளிகள் விடுதல் அதாவது ஒற்றை எழுத்து விடுதல்) கூடசதுர்த்த பாதம் (நாலாவது பாதத்தை மறைத்து விடுதல்) பிரேளிகை (சிலேடை) அட்சரச்யுதகம் ( எழுத்தை விடுதல்) மாத்ராச்யுதகம் (மாத்திரை விடுதல்) – போன்ற வகை செய்யுள் வகைகளில் புலமை உள்ளவன்

ஆக நம் மூன்னோர்கள் சரியாய் தேர்ந்தேடுக்கும் அறிவை பெற்றிந்தனர். ஆனால் நாம்???

சரியாக தேர்ந்துதெடுப்பதை விட்டு சத்தியாகிரம், மெழுகுவர்த்தி ஊர்வலம் எதற்கு?

மக்களாட்சியில் நம்பிக்கை இல்லயா? ஆள்பவர்கள் சரியில்லை என்றால்  களத்தில் இறங்கி போட்டியிடுவதை விட்டு விட்டு sms, email twitter facebook மூலம் வெட்டி பேச்சு  எதற்கு?

நம்பிக்கை வைப்போம் நம்மீது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: