கலித்தொகை – என் பார்வையில் -3

December 25, 2013

3.கலித்தொகையில் நம்பிக்கைகள்

கிரகணம் பற்றிய நம்பிக்கைகள்

கிரகணத்தின் போது பாம்பு நிலவினை கவ்வும் எனும் நம்பிக்கை பல பாடல்களில் காணப்படுகிறது.

தலைவியின் திருமுகம் இனிய கிரணங்களுடைய திங்களையொக்கும். தலைவன் பிரிவால் அம்முகம் பாம்பு சேர்ந்த திங்கள் போல் பசப்பு பரந்து கெட்டது.


பாடல் 15 வரிகள் 16,17

தீம் கதிர் மதி ஏய்க்கும் திருமுகம்; அம் முகம்,
பாம்பு சேர் மதி போலப் பசப்பு ஊர்ந்து தொலைந்தக் கால்?

பாடல் 104 வரிகள் 37-38

பால் மதி சேர்ந்த அரவினைக் கோள் விடுக்கும்
நீல் நிற வண்ணனும் போன்ம்.

பாடல் 105 வரிகள் 45-46
வாள் பொரு வானத்து, அரவின் வாய் கோட்பட்டுப்
போதரும் பால் மதியும் போன்ம்!

பாடல் 140 17-19
திங்கள் அரவு உறின், தீர்க்கலார் ஆயினும்,
தம் காதல் காட்டுவர் சான்றவர் – இன் சாயல்


கற்புடைய பெண்களினால் மழை பெய்யும் எனும் நம்பிக்கை


பாடல் 16 வரி 20

வறன் ஓடின் வையகத்து வான் தரும் கற்பினாள்

பாடல் 39 வரி 6
அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே;


முற்பிறப்பு பற்றிய நம்பிக்கை

பாடல் 62 வரிகள் 17 19
மனத்து முற்பிறப்பில் யானும் அவளும் வேறல்லமென்பது

கூறும் சொல் கேளான், நலிதரும்; பண்டு நாம்
வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால்; அவனொடு
மாறு உண்டோ, நெஞ்சே! நமக்கு?

Advertisements