கலித்தொகை – என் பார்வையில் -2

2.கலித்தொகையில் தத்துவம்

உடன்போக்கில் சென்ற பெண்னை தேடிக்கொண்டு வந்த தாய் வழியில் வந்த அந்தணரை, கேட்க, அவளை கண்டோம் என்றனர். அத்தாயைத் தேற்றும் விதமாக மலையிலே தோன்றினாலும் சந்தன மரங்களால் மலைக்கென்ன பயன? கடலிலே தோன்றினாலும் முத்தால் கடலுக்கென்ன பயன்? யாழிலே தோன்றினாலும் இனிய ஓசையினால் யாழுக்கென்ன பயன்? என கூறினார்.


பாடல் – 9 வரி 12:20

பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலை உளே பிறப்பினும், மலைக்கு அவை தாம் என் செய்யும்?
நினையும்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

சீர்கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை,
நீர் உளே பிறப்பினும், நீர்க்கு அவை தாம் என் செய்யும்?
தேரும்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழ் உளே பிறப்பினும், யாழ்க்கு அவை தாம் என் செய்யும்?

பொருள்

நறியனபலவுங் கூடும் நறிய சந்தன மரங்கள் மெய்ப்படுப்பார்க்குப் பயன்கொடுப்பதல்லது மலையிடத்தே பிறந்தனவாயினும் அச்சந்தனங்கள்தாம் அம்மலைக்கு என்ன பயனைக் கொடுக்கும்? ஆராயுங்காலத்து நும்முடையமகள் பயன்படும் பருவத்து நுமக்கும் பயன்படாள்.

தலைமை பொருந்திய வெள்ளிய முத்துக்கள் அணிவார்க்குப் பயன்படுவதல்லது கடலிடத்தே பிறந்தனவாயினும் அம்முத்தங்கள்தாம் அக்கடலுக்கு என்ன பயனைக் கொடுக்கும்? ஆராயுங்காலத்து நும்முடையமகளும் பயன்படும் பருவத்து நுமக்கும் பயன்படாள்.

ஏழுநரம்பாற் கூட்டிய இனிய ஓசைகள் பாடுவார்க்குப் பயன்கொடுத்தலல்லது யாழிடத்தே பிறந்தவாயினும் அவ்வோசைகடாம் அந்த யாழுக்கு என்ன பயனைக் கொடுக்கும். ஆராயுங்காலத்து நும்முடையமகளும் பயன்படும் பருவத்து நுமக்கும் பயன்படாள்.


பொருள் சேர்த்தலில் விருப்பமுடயவனாகின்றான் தலைவன். அவனுக்கு வாழ்வின் நிலையில்லாமைய தலைவி மிக எளிதாக விளக்குகிறாள். இளமையும், காமமும் உனக்காக நில்லாது எனவும் கூறுகிறாள். எத்தனை பெரிய தத்துவத்தை இதனை காட்டிலும் எளிமையாக கூறமுடியுமா?


பாடல் 12 வரி 15

கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை;


 

 

Advertisements

One Response to கலித்தொகை – என் பார்வையில் -2

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: