எல்  டி எஸ் பி – லினக்ஸ் டெர்மினல் சர்வர் பிராஜக்ட்(LTSP)

எல்  டி எஸ் பி லினக்ஸ் டெர்மினல் சர்வர் பிராஜக்ட்(LTSP)

உங்கள் மனதில் எப்பொழுதாவது கீழ் கண்ட கேள்விகள் எழுந்துள்ளதா?

1.பழைய கணினிகளை என்ன செய்வது?

2.ஹார்ட் டிஸ்க் இல்லாமல் கணினி இயங்குமா?

3.மென்பொருள்களை அனைத்து கணினியிலும் நிறுவாமல் ஒன்றில் நிறுவி பிற கணினிகள் இதை பெற்றுக் கொள்ள கூடாதா?

ஆம் என்றால் எல்  டி எஸ் பி உங்கள் கேள்விகளுக்கு விடையாகும்.

தின்கிளயன்ட் (Thin Client) என்பதை நீங்கள் கேள்வி பட்டு இருக்கலாம். இதை லினக்ஸில் நிறுவ எல் டிஎஸ் பி உதவும். ஒரு திறன் மிகுந்த கணினியின் (server) திறனை பல எளிய கணினிகளிலும் பெறச் செய்வதே எல் டிஎஸ்பி யின் நோக்கமாகும்.

முதலில் சில அடிப்படை விஷயங்கள்.

சிறுத்த கணினி-(Thin Client)

இவ்வகை கணினிகளில் மென் பொருள் ஆபரேடிங் சிஸ்டம், பயன்பாட்டு புரோக்கிராம்கள் ஆகிய அனைத்தும் ஒரு மூலக் கணினியில் இருந்து தருவிக்கபட்டு இயக்கப்படும். இந்த சிறுத்த கணினியில் ஹார்ட் டிஸ்க்,சிடி போன்றவை அவசியம் இல்லை.

எல் டிஎஸ்பி மூலக் கணினி-(LTSP SERVER)

மூலக் கணினி அனைத்து சிறுத்த கணினிகளுக்கும் மென்பொருள்களை கொடுத்து தன்னோடு இனைத்துக் கொள்ளும். சிறுத்த கணினியில் வேலை செய்பவர்கள் உண்மையில் இந்த மூலக் கணினியில் தான் வேலை செய்வர்.

எல் டிஎஸ் பி எப்படி இயங்குகிறது?

ஒரு கணினி இயங்குவதற்க்கு தேவையான மென்பொருள்கள்
1) கெர்னல்(kernel) எனப்படும் வித்து.
2) பிற ஆபரேடிங் சிஸ்டம் தொகுப்புகள்.
3) பயண்பாட்டு தொகுப்புகள்.

சிறுத்த கணினியின் சவாலே இவை அணைத்தையும் மூலக் கணினியில் இருந்து வலை மூலம் தருவித்து இயக்குவதுதான்.

சவால் 1: .பி (I.P) எண்

வலையில்(LAN) எந்த ஒரு பரிமாற்றம் நடப்பதற்கு ஐபி எனப்படும் முகவரி எண் தேவைசிறுத்த கணினி எதையும் சேமிக்க முடியாததால் ஐபியை வலை முலம் பெறவேண்டும்.

இதற்கு DHCP எனும் மென்பொருள் உதவும். இதை மூலக் கணினியில் நிறுவ வேண்டும். இது கேட்பவருக்கெல்லாம் ஐ.பி கொடுக்க வல்லது.

சிறுத்த கணினியில் etherboot  எனும் ஒருவகை வசதி இருக்க வேண்டும்.
Etherboot என்றால் என்ன? இது ஒருவகையான மென்பொருள். மிகசிறியது. வலைமுலம் IP எண்னும், கெர்னல் இருக்கும் இடம் மற்றும் gateway எனப்படும் வழிக்காட்டியின் எண் ஆகியவற்றை மூலக் கணினி இருந்து பெறவல்லது. இதை  முன்று வகையில் அமைக்கலாம்.

  • Ethernet cardல் ஒரு சில்லாக இருக்கலாம்.

  • பிளாப்பி/சிடிராமில் இருக்கலாம்.

  • அன்மைகால மதர்போர்டுகளில் இது இணைக்க பட்டுள்ளது.

சிறுத்த கணினி துவங்கியவுடன் இந்த etherboot உயிர்பெற்று IP எண் தேவைப்படுகின்றது என்றும், தன்னுடைய MAC Address இன்னது என்றும்  வலையில்  பிரகடனப்படுத்தும். இது வலையில் உள்ள அனைத்து கணினிகளுக்கும் போய் சேரும். முன்னர் கூறிய DHCP இதற்கு பதில்  கூறும். இதில் IP எண்,கெர்னல் உள்ள இடம், gateway எனப்படும் வழிகாட்டி ஆகியவை இருக்கும். இந்த பதிலை etherboot  படித்துக்கொள்ளும். ஆக சிறுத்த கணினி IP எண் கிடைத்துவிட்டது. ஒரு சவாலை சமாளித்து விட்டோம்.

சவால்-2 கெர்னலை தருவிப்பது.

கெர்னல் என்பது ஒரு கோப்பு. இதனை RAMல் ஏற்றி அதனை இயக்க வேண்டும். Etherbootல் tftp (trivial file transfer protocol) எனும் எளிமையான கோப்பு பரிமாற்ற வசதி உண்டு. இதற்கு மூலக் கணினியில் tftp server எனும் மென்பொருள் இயங்கி கொண்டிருக்க வேண்டும். Etherboot tftp மூலம் கெர்னலை தருவித்து,அதை இயக்கி விடும். கெர்னல் இயங்கினால் கணினி உயிர் பெற்றது போல். இதன்மூலம் இரண்டாவது சவாலை சமாளித்துவிட்டோம்.

சவால்-3 ஆப்ரேடிங் சிஸ்டம்
கெர்னல் மட்டும் ,சிறுத்த கணினி இயங்குவதற்கு போதாதுஆப்ரேடிங் சிஸ்டம்மின் மற்ற கோப்புகள் ஆனைகள்,libraries –  ஆகியவைகள் தேவைப்படும்இவைகள் கெர்னலைப்போல சிறியது அல்லகுறைந்தது 300MB ஆவது தேவைப்படும்அதனால் tftp முலம் தருவிக்கமுடியாது. RAMமும் போதாதுஇதற்காக NFS என்பதை பயன்படுத்த வேண்டும். NFS-Network File System-என்பது மூலக்கணினியில் உள்ள ஒரு கோப்புதொகுப்பை வலைமுலம் பிற கணினிகள்  உபயோகப்படுத்துதல் ஆகும்(sharing). இந்த NFS மூலக் கணினியில் நிறுவவேண்டும்.   இதன் மூலம் சிறுத்த கணினி தனக்கு வேண்டிய /bin, /etc, /lib, /usr/lib போன்ற தொகுப்புகளை பெறும். அண்மை காலங்களில் NBD-Network Block Device-உபயோகப்படுத்தப்படுகிறது.

எல்டிஎஸ்பி திட்டத்தின் மிக முக்கிய பணி இந்த ஆப்ரேடிங் சிஸ்டம் உருவாக்குவதுதான். இந்த ஆப்ரேடிங் சிஸ்டம்ல் மிக அடிப்படையான சில செயல்பாடுகள் மட்டும் கொண்டிருக்கும். எல்டிஎஸ்பி-4 வரை இந்த ஆப்ரேடிங் சிஸ்டம் முழுமையும் source codeல் இருந்து இவர்கள் தயாரித்து கொண்டிருந்தார்கள். எல்டிஎஸ்பி-5 முதல் டெபியன் உபுண்டு போன்ற முக்கிய லினக்ஸ் தொகுப்புகளில் இருந்து எளிதாக உருவாக்கபடுகிறது.

சவால்-4 மூலக் கணினிlogin பெறுவது.

ஆபரேடிங் சிஸ்டம் கிடைத்தவுடன், சிறுத்த கணினி, மூலக் கணினிlogin prompt கிடைக்கச் செய்யவேண்டும். அப்போதுதான் உபயோகிக்க முடியும். இதற்கு X11 எனப்படும் யூனிக்ஸ் /லினக்ஸில் உள்ள மென்பொருள் உதவுகிறது. அல்லது வெறும் text mode-எழத்துரு மட்டுமே போதும் என்றால் telnet-ஐ உபயோகிக்கலாம்.

சிறுத்த கணினி X11+ssh உபயோகித்து மூலக் கணினிஇனைத்துக்கொள்ளும். இதன் மூலம் மூலக் கணினிஉள்ள உபயோகிப்பாளர்பெயர்(username) மற்றும் பாஸ்வேர்ட்(password) கொடுத்து உபயோக்க தொடங்கலாம். இனி ஒருவர் பயன்படுத்தும் அணைத்து  மென்பொருளுமே மூலக் கணினியில் உள்ள புரோகிராம்கள் தான். கோப்புகளும் மூலக் கணினியில் உள்ளதுதான்.

இந்த அட்டவனை நடப்பவற்றை எளிதில் விளக்குகிறது.

எல்டிஎஸ்பி நடப்பது என்ன?

நிலை/இயக்கம் கணினி
சிறுத்தகணினி ஆன் செய்தல் சிறுத்த கணினி
Ether boot தொடக்கம் சிறுத்த கணினி
IP எண் வேண்டி Ether boot  LANல் dhcp பிரகடனம்-(தன் MAC எண் உடன்) சிறுத்த கணினி
மூலக்கணினி dhcp பதில் கூறல். இதில் IP எண் வழிகாட்டி எண் கெர்னல் பெயர் மூலக்கணினியின் எண் ஆகியன இருக்கும் மூலக்கணினி
Ether boot பதிலை படித்தல் சிறுத்த கணினி
கெர்னல் வேண்டி tftp செய்தி அனுப்புதல் சிறுத்த கணினி
கெர்னல் கொடுத்தல் மூலக்கணினி
Ether boot கெர்னல் இயக்குதல் . சிறுத்த கணினி
கெர்னலின் கட்டுபாட்டில் கணினி சிறுத்த கணினி
கெர்னல் dhcp அனுப்புதல் சிறுத்த கணினி
dhcp பதில் கூறல். இதில்  ஆபரேடிங் சிஸ்டம் உள்ள இடம்  பற்றிய குறிப்பு இருக்கும் மூலக்கணினி
கெர்னல் ஆபரேடிங் சிஸ்டமை nfs மூலம் தருவித்தல் சிறுத்த கணினி
கெர்னல் ssh மூலம் login திரையை கொணர்தல் சிறுத்த கணினி
பயனாளர் பயண்படுத்துதல் சிறுத்த கணினி + மூலக்கணினி

எல்.டி.எஸ்.பியின் நன்மைகள்.

  • சிறுத்த கணினியில்  மிகக் குறைந்த CPU திறன் போதும்.

  • சிறுத்த கணினியில் RAM 64MB [சிலசமயங்களில் 16MB கூட] போதும்.

  • HD,CD-rom-தேவையில்லை.

  • விலை குறைவு.

  • பழைய கணினியையும் உபயோகிக்கலாம்.

  • வேகம் மூலக் கணினிபொறுத்தது. பொதுவாக சிறுத்த கணினி பொறுத்தது அல்ல.

  • அனைத்து மென்பொருளும் ஒரே கணினியில். இதனால் பராமரிப்பது எளிது.

  • அனைத்து கோப்புகள் ஒரே கணினியில்.இதணால் backup செய்வது எளிது.

  • LANல் எந்த கணினியிலும் வேலை செய்யலாம்.

  • சிறுத்த கணினியில் பிரின்ட் செய்யலாம்.

  • மொத்த செலவும்,பிற பயன்பாட்டு செலவுகள், மின்சாரம் உட்பட்ட செலவும் குறைவு.

  • நீண்ட காலம் உழைக்கும். இதனால் சுற்று சூழல் காக்கபடுகிறது.

எல்டிஎஸ்பி என்பது பல இடங்களில்  மிக வசதியானது. அவைகளில்  சில

  1. விற்பனை  கூடங்கள்(SALES COUNTERS).

  2. மருத்துவமனைகள்

  3. பள்ளி ஆய்வு கூடங்கள்

அண்மைகால வளர்ச்சிகள்
எல்.டி.எஸ்.பி அபாரமக வளர்ந்து வருகிறது. அவைகளில் சில

  1. Local device support -USB pen drive. பென் டிரைவ்  சிறுத்த கணினியில் பயன்படுத்தலாம்.

  2. ஒலி ஒளிசிறுத்த கணினியில் பயன்படுத்தலாம்.

மேலும் அறிய http://www.ltsp.org என்ற தளத்தை பார்கவும்.

9 Responses to எல்  டி எஸ் பி – லினக்ஸ் டெர்மினல் சர்வர் பிராஜக்ட்(LTSP)

  1. anon says:

    Is this transliteration or did you use a Tamil editor ? Thanks

  2. Splendid work in TAMIL. kudos!

  3. rajasuperman says:

    Great to see you blogging 🙂

    Looking forward your to future posts.

  4. Rajkumar says:

    Hi Raman,
    I want to know how to write blog in Tamil in word press. Whatever i am posting in tamil, its becoming ????? (question marks) in the post.

    Help me.

    • ramanchennai says:

      Using unicode should be the best way. All I do is to install Tamil-keyboard support, tamil fonts from debian packages. Ubuntu tamil team has good documents on this subject

  5. nathan says:

    RamanSir,
    Execllent article about LTSP in own language. I made it in my office.

    keep posting

  6. mettur mohan says:

    your LTSP Document is nice to Read and also Interested to show about the Tamil awareness and communication ettique I realised the necessary for it to develop our society about those qualities I am also participate in that ( I also need to update ) Thanks for your posting about ltsp is fantastic

    Good job i expect more articles from you in tamil ITs A Real Taste of my own mother language

  7. Suthan says:

    The post gave me all the things basically i needed to know and also link for further references. excellent work

Leave a comment